''இது ரொம்ப கஷ்டமான நேரம், நாங்க மட்டுமே பண்ணோம்'' - ஃபோட்டோ பகிர்ந்து நடிகை ரம்பா உருக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ரம்பா 10 வது திருமண தினத்தை தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடினார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்த கடினமான நேரத்தில் நண்பர்கள், உறவினர்கள் இல்லாமல் நான், எனது கணவர் குழந்தைகள் (லான்யா, ஷாஷா, மற்றும் ஷிவின்) ஆகியோர் மட்டும் கொண்டாடினோம்.

இந்த நிகழ்வு மிகவும் உணர்வுப்பூர்வமானது. நாங்களே இணைந்து கேக் செய்தோம். இது வெளியில் இருந்து வாங்குவதை விட சிறப்பாக இருந்தது. கேக்கின் ஒவ்வொரு பகுதியும் எங்கள் 10 வருட காதல் கதையைக் கொண்டுள்ளது. எங்கள் மகள்கள் லான்யா, ஷாஷா எங்களுக்கு சர்பரைஸாக ஸ்பெஷல் கார்டு அளித்தனர். இந்த கடினமான நேரங்களில் நாங்கள் பணம், ஸ்பெஷலான பரிசுகள் எதுவும் இல்லாம் வெறும் காதலுடன் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றார்.
நடிகை ரம்பா 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஹீரோயின்களில் ஒருவர். சூப்பர் ஸ்டாருடன் 'அருணாச்சலம்', கமல்ஹாசனுடன் 'காதலா காதலா', தளபதி விஜய்யுடன் 'நினைத்தேன் வந்தாய்', 'மின்சாரக்கண்ணா'', தல அஜித்துடன் 'ராசி' என தமிழின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.
இயக்குநர் சுந்தர்.சி - நடிகர் கார்த்திக் கூட்டணியில் அவர் நடித்த காமெடியை மையப்படுத்திய படங்களான 'உள்ளத்தை அள்ளித்தா', 'உனக்காக எல்லாம் உனக்காக' உள்ளிட்ட படங்களை தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கினார். இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.