"சிவகார்த்திகேயனை நான் தான் அறிமுகம் பண்ணியிருக்கணும்.. ஆனா" - போட்டு உடைத்த பெண் இயக்குனர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவில் மெரினா படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் சிவகார்த்திகேயன். பின்பு அடுத்தடுத்து ஹிட் கொடுத்து  சினிமாவின் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கிறார்.

சிவகார்த்திகேயனை இந்த பெண் இயக்குனர் தான் அறிமுகம் செய்வதாக இருந்ததாம் Female director says Sivakarthikeyan should have been

அதேபோல் அம்மணி, நெருங்கி வா முத்தமிடாதே, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இயக்கியவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் லக்ஷ்மியின் பழைய குறும்படம் ஒன்றை சுட்டி காட்டி "இதனை எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என்று கேட்க "இது வெறும் குறும்படம் மட்டும் இல்லை. சிவகார்த்திகேயனை நான் தான் அறிமுகம் செய்து இருக்க வேண்டும். அந்த சமயத்தில் நான் அதனை கைவிட்ட பின்னரே அவர் மெரினா படத்தில் ஒப்பந்தம் ஆனார்" என்று அதிரடியாக கூறியுள்ளார். இத்தனை வருடங்கள் கழித்து இந்த விஷயம் பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.

Entertainment sub editor