மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகரை சந்தித்த பிரபல ஹீரோயின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர்யா மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோர் இணைந்து ஆகஸ்ட் சினிமா சார்பாக தயாரித்திருந்த படம் 'பதினெட்டாம் படி'. இதில் மம்முட்டி, பிருத்வி ராஜ், ஆர்யா உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நகுல் தம்பி கடந்த ஜனவரி 10 ஆம் தேதி தனது நண்பருடன்  காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு தனியார் பேருந்து மோதிய விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நகுலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை மருத்துவமனையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் கைகோர்த்தபடி இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், ''நகுலின் நல விரும்பிகளுக்கு அவர் தனது அன்பை கொடுத்தடுப்பினார்" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Actress Priya Prakash Varrier Visits hospital for Nakul Thambi , Video Goes viral | பிரபல நடிகரை மருத்துவமனையில் சந்தித்த பிரியா பிரகாஷ் வாரியர

People looking for online information on Nakul Thambi, Priya Prakash Varrier will find this news story useful.