''அவங்க மேல கொலை வழக்கு பதிவு செய்யணும்'' - சாத்தான்குளம் விவகாரம் குறித்து பிரபல நடிகை அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தையும் மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்ததாக கூறப்படுகிறது.

Popular Actress condemns police regarding Sathankulam case ft Sanam Shetty | சாத்தான் குளம் விவகாரம் குறித்து போலீஸை சாடிய பிரபல நடிகை

இதனையடுத்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.  இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உரிய நீதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் வணிகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து நடிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகை சனம் ஷெட்டி Behindwood TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருப்பதாகவும், அதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து அதனை ஸ்க்ரீன் ஷாட் பகிர்ந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

குற்றவாளிகளை ஏன் பாதுகாக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் சஸ்பெண்ட் பண்றதும், டிரான்ஸ்ஃபர் பண்றதும் கொலை வழக்குக்கான தீர்வாகுமா என்றும் பொதுமக்கள் யாராவது தவறு செய்தால் எச்சரித்து விட்டுவிடுவீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

''அவங்க மேல கொலை வழக்கு பதிவு செய்யணும்'' - சாத்தான்குளம் விவகாரம் குறித்து பிரபல நடிகை அதிரடி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Popular Actress condemns police regarding Sathankulam case ft Sanam Shetty | சாத்தான் குளம் விவகாரம் குறித்து போலீஸை சாடிய பிரபல நடிகை

People looking for online information on Sanam Shetty, Sathankulam will find this news story useful.