அடடே.!! கோ கார்த்திகாவுக்கு தங்கச்சி கொடுத்த செம சர்ப்ரைஸ்.! - என்ன தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கார்த்திகா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது பிறந்தநாள் சர்ப்ரைஸ் குறித்து பதிவிட்டுள்ளார். 

கோ கார்த்திகாவுக்கு தங்கச்சி கொடுத்த செம பரிசு | actress ko karthika nair shares her present present from sister

ஜீவா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ திரைப்படத்தில் நடித்த பிரபலமானவர் கார்த்திகா நாயர். இவர் நடிகை ராதாவின் மகளாவார். மேலும், இவரின் தங்கையான துளசி நாயர், மணிரத்னம் இயக்கிய கடல், ஜீவா நடித்த யான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இந்நிலையில் நடிகை கார்த்திகா நாயர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். தனது பிறந்தநாளுக்கு அவரது நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து அனுப்பிய வீடியோக்களின் தொகுப்பை பகிர்ந்துள்ள அவர், ''இந்த ஊரடங்கில் இது சிறப்பான பிறந்தநாள். என்னுடைய அருமையான தங்கைக்கும், இந்த வீடியோவில் இருக்கும் சர்ப்ரைஸ்களுக்கும் நன்றி. மேலும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அத்தனை உள்ளங்களுக்கு என் நன்றி'' என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கார்த்திகாவுக்கு கமன்ட்ஸாக கொடுத்து வருகின்றனர். 

 

https://www.facebook.com/734405007/videos/10163869486530008/

கோ கார்த்திகாவுக்கு தங்கச்சி கொடுத்த செம பரிசு | actress ko karthika nair shares her present present from sister

People looking for online information on Karthika Nair, Thulasi Nair will find this news story useful.