இளம் நடிகர் உயிருக்கும் போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா மற்றும் சந்தோஷ் சிவன் ஆகஸ்ட் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்திருந்த படம் 'பதினெட்டாம் படி'. இதில் மம்முட்டி, பிருத்வி ராஜ், ஆர்யா உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.

Pathinettam Padi fame Young Actor Nakul Thambi Critically injured

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நகுல் தம்பி கடந்த ஜனவரி 10 ஆம் தேதி தனது நண்பருடன்  காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு தனியார் பேருந்து மோதிய விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நகுலின் நண்பர் குணமான நிலையில் நகுல் இன்னும் சீரியஸான நிலையில் ஐசியூவில் இருக்கிறார். மருத்துவ செலவிற்கு போதிய பணம் இல்லாமல் நகுலின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். தற்போது அவரது குடும்பத்தினர் ஃபண்ட் ரைஸர்(Fund Raiser) ஆப் ஒன்றின் மூலம் பண உதவி கேட்டுள்ளனர். இதுகுறித்து இந்த படத்தில் முதன்மை வேடத்தில் நடித்த நடிகை ஆஹானா கிருஷ்ணன் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor