Beast Others
www.garudabazaar.com

"பிடிச்ச ஹீரோயின் யாரு?.." லாக் பண்ணிய லைலா.. பிரசாந்த் பதில்.. 22 வருசம் கழிச்சு கலகல.. Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில், 90-களின் காலகட்டங்களில் இருந்தே முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் 'டாப் ஸ்டார்' பிரசாந்த்.

Laila about prashanth favourite heroine his answer excited fans

பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் அடுத்தடுத்து படங்கள் நடித்து, பல வெற்றி படங்களையும் அவர் கொடுத்து வந்துள்ளார்.

தொடர்ந்து, தற்போது தங்களின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில், அந்தகன் என்னும் படத்தில் நாயகனாக பிரசாந்த் நடித்து வருகிறார்.

விரைவில் வெளியாகும் அந்தகன்..

ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்து, கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி இருந்த திரைப்படம் அந்தாதூன். இதனை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இதன் தமிழ் ரீமேக் தான் 'அந்தகன்'. இதனை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்கி வருகிறார்.

பிரசாந்த்துடன், இந்த படத்தில், கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, யோகி பாபு, பிரியா ஆனந்த், கே.எஸ். ரவிக்குமார், வனிதா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில், இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையில் சில பாடல்களும் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்திருந்தது.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன், நடிகர் பிரசாந்தின் பிறந்தநாள் தினத்தில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பிரசாந்த், தியாகராஜன் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டிருந்தனர். இதில், பிரசாந்த் பேசி இருந்த பல விஷயங்கள், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது.

22 ஆண்டுகளுக்கு பிறகு..

இந்நிலையில், நடிகர் பிரசாந்துடன் 'பார்த்தேன் ரசித்தேன்' படத்தில் ஜோடியாக இணைந்து நடித்திருந்த 'சிரிப்பழகி' நடிகை லைலாவும் நடிகர் பிராசாந்த்தும்  பிஹைண்ட்வுட்ஸ் நிகழ்ச்சியில் 22 வருடங்களுக்கு பிறகு ஒன்றாய் தோன்றி  அளித்திருந்த நேர்காணல் நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இதில், "பார்த்தேன் ரசித்தேன்" படத்தில் வரும் பேருந்து காட்சிகள் தொடர்பான நினைவலைகளை பிரஷாந்த் மற்றும் லைலா ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். அதே போல, இந்த நேர்காணல் முழுவதும், தன்னுடைய பட்ட பெயருக்கு ஏற்ற வகையில், நடிகை லைலா சிரித்துக் கொண்டே மிகவும் ஜாலியாக இருந்தார்.

லைலாவின் ஃபேவரைட்..

அதே போல, இந்த நேர்காணலின் போது, பிரசாந்த், லைலா இருவரும் மாறி மாறி கேள்வி கேட்டுக் கொண்ட Segment, மேலும் ஹைலைட் ஆன ஒன்றாய் அமைந்தது .

அதில், "சென்னையில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன?" என லைலாவிடம் பிரசாந்த் கேட்டார். இதற்கு பதிலளித்த லைலா, "தமிழ்நாடு மற்றும் சென்னையில் பிடித்த விஷயம் எதுவென்றால் இங்குள்ள மக்கள் தான். அனைவரும் மிக அன்பாக இருப்பார்கள்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பிடித்த ஹீரோயின் யார்?

தொடர்ந்து, பிரசாந்த்திடம் கேள்வி கேட்ட லைலா, "உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார்?" என கேட்டார். நிச்சயம் பிரசாந்த் பதில் சொல்ல திணறுவார் என்றே லைலா கருதி, மாட்டிக்கிட்டார் பிரசாந்த் என சொல்லி தொகுப்பாளினியுடன் சேர்ந்து ஜாலியாக சிரிக்கிறார். ஆனால், பிரசாந்த்தோ கூலாக, சிரிக்க தொடங்கினார்.

அதன்பின் பேசிய பிரசாந்த்,  "ஏற்கனவே என்னுடைய பேவரைட் ஹீரோயின் யார் என்பதை இரண்டு முறை சொல்லி விட்டேன்.. வேண்டும் என்றால் ரீவைண்ட் பண்ணி பாருங்கள்.. திரும்பவும்லாம் சொல்ல முடியாது" என சொல்ல, லைலாவும் தொகுப்பாளினியும் "எப்போது.. எப்போது?" என குழப்பத்துடன் கேட்டனர்.

பின்னர் இதற்கு விளக்கம் சொன்ன பிரசாந்த், "நான் ஒரே ஒரு ஹீரோயினை மிகவும் நேசிக்கிறேன். அவங்கள மீறி வேற எந்த ஹீரோயினும் எனக்கு ஃபேவரைட் கிடையாது. அது என்னுடைய அம்மா தான்" என பிரசாந்த் கூறியதும், நெகிழ்ந்து ஆச்சர்யம் அடைகிறார் லைலா.

22 வருடம் கழித்து நேர்காணல் நிகழ்ச்சியில் தோன்றிய பிரசாந்த், லைலா இருவரும் கலகலவென பேசிய முழு வீடியோவை இணைப்பில் உள்ள லிங்கில் காணலாம்

"பிடிச்ச ஹீரோயின் யாரு?.." லாக் பண்ணிய லைலா.. பிரசாந்த் பதில்.. 22 வருசம் கழிச்சு கலகல.. EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Laila about prashanth favourite heroine his answer excited fans

People looking for online information on Andhagan, Exclusive, Laila, Parthen Rasithen, Prashanth will find this news story useful.