''ஷூட்டிங் அப்போ எனக்கு கடுமையான இருமல், காய்ச்சல் இருந்தது...'' - தல அஜித் ஹீரோயின் சொன்ன தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த கதாநாயகிகளில் ஒருவர் லைலா. அவரது சிரிப்பை ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். நடிகை லைலா தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி என இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் நடித்துள்ளார்.
குறிப்பாக தமிழில் ஷங்கரின் 'முதல்வன்', தல அஜித்துடன் 'தீனா' , 'பரமசிவன்', விக்ரமுடன் 'தில்', சூர்யாவுடன் இணைந்து 'நந்தா', 'உன்னை நினைத்து', 'மௌனம் பேசியதே', 'பிதாமகன்', 'கண்டாள் முதல்' என அவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை
இந்நிலையில் நடிகை லைலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தல அஜித்தின் 'தீனா' பட நினைவுகள் குறித்து பகிர்ந்துள்ள அவர், ''எனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்று. காதல் வெப்சைட் பாடல் குறித்து உங்கள் நினைவுகளை பகிருங்கள்.
இந்த பாடல் பதிவின் போது எனக்கு உடல் நிலை சரியில்லை. எனக்கு கடுமையான இருமல், காய்ச்சல் இருந்தது. ஆனால் நான் காட்டிக்கொள்ளவிரும்பவில்லை. இந்த பாடலில் உள்ள எனர்ஜி எனக்கு எனர்ஜி அளித்து நடனமாட வைத்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.