www.garudabazaar.com

சூர்யா பட ஹீரோயின் இப்போ கார்த்தி படத்துல... வெளியான செம்ம Exclusive தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியாக கார்த்தி நடிப்பில் சுல்தான் படம் திரை அரங்கில் வெளியானது.  சுல்தானை அடுத்து சர்தார் படத்தில் கார்த்தி நடிக்க ஆரம்பித்தார்.

Suriya film Actress Laila doing a role in karthi new movie

Also Read | காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துல ஸ்ரீசாந்த்.. இந்த ரோல்ல தான் நடிக்கிறாரா?

சர்தார் படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன், விருமன் படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொண்டார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பின்னர் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

Suriya film Actress Laila doing a role in karthi new movie

சென்னையில் சர்தார் படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் மைசூரில் நடைபெற உள்ளது . இதற்காக படக்குழு மைசூரு சென்றுள்ளனர். நடிகை ராஸிகண்ணா - கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் மைசூரில் படமாக்கப்படுகின்றன.

Suriya film Actress Laila doing a role in karthi new movie

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலா நடிக்கிறார். இதனை அவர் அதிகாரப்பூர்வமாக Behindwoods சேனல் பேட்டியில் கூறியுள்ளார். 16 வருடங்களுக்கு பின் லைலா நடிக்க வருகிறார்.

Suriya film Actress Laila doing a role in karthi new movie

லைலா ஏற்கனவே சூர்யாவுடன் நந்தா, பிதா மகன், மௌனம் பேசியதே, உன்னை நினைத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சூர்யா தம்பி கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

Suriya film Actress Laila doing a role in karthi new movie

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

சூர்யா பட ஹீரோயின் இப்போ கார்த்தி படத்துல... வெளியான செம்ம EXCLUSIVE தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Suriya film Actress Laila doing a role in karthi new movie

People looking for online information on கார்த்தி, சர்தார், லைலா, Karthi, Karthi new movie, Laila will find this news story useful.