www.garudabazaar.com

3வது படத்தில் ரஜினியை இயக்கும் 'ஜெய் பீம்' ஞானவேல்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தை த.செ.ஞானவேல் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நன்றி தெரிவித்து போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார் த.செ.ஞானவேல்.

Director TJ Gnanavel post after Thalaivar 170 movie update

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கார் பயணம்.. பார்த்திபன் பகிர்ந்த THROWBACK சம்பவம்!

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது. இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ரஜினிகாந்தின் 170-வது படம் குறித்து இணைய தளங்களில் ரசிகர்கள் பலவிதமான யூகங்களையும், தங்களது ஆசைகளையும் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள தலைவர்170 படத்தினை 'ஜெய்பீம்' புகழ் த.செ.ஞானவேல் இயக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Director TJ Gnanavel post after Thalaivar 170 movie update

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இயக்குனர் த.செ.ஞானவேல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"மகிழ்வான தருணம்... புதிய பயணம் இனிதே ஆரம்பம்" எனக் குறிப்பிட்டுள்ளார். த.செ. ஞானவேல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெய்பீம். ஜோதிகா & சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

Director TJ Gnanavel post after Thalaivar 170 movie update

Images are subject to © copyright to their respective owners.

இந்த திரைப்படம் கடந்தாண்டு அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில்  தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து த.செ.ஞானவேல் படம் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெருமகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read | THALAIVAR170: ஜெய் பீம் இயக்குனருடன் இணையும் ரஜினி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Director TJ Gnanavel post after Thalaivar 170 movie update

People looking for online information on Thalaivar 170 movie, Thalaivar 170 movie update, TJ Gnanavel will find this news story useful.