www.garudabazaar.com

அம்மாவான சீரியல் நடிகை சந்திரா.. குழந்தையின் ஃபோட்டோவை வெளியிட்டு நெகிழ்ச்சி பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சீரியல் நடிகை சந்திரா லட்சுமனுக்கு குழந்தை பிறந்துள்ளது.

Actress Chandra Lakshman Blessed with Baby Boy

Also Read | அசீமா? அசலா?.. இந்த வாரம் Elimination இவர் தான்.. பல ட்விஸ்ட்களுக்கு பிறகு அறிவிச்ச கமல்!!

'மனசெல்லாம்' என்ற ஶ்ரீ காந்த் - த்ரிஷா நடித்த தமிழ் திரைப்படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர் கேரளாவைச் சேர்ந்த சந்திரா லட்சுமண்.

இதன் பின்னர், மலையாள சினிமாவிலும் சந்திரா நடித்திருந்த நிலையில், அடுத்தடுத்து அவர் நடித்த சீரியல்கள் மூலம் மிகப் பிரபலமானார்.

அதிலும் குறிப்பாக, தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை தேவயானி நடிப்பில் ஒளிபரப்பான 'கோலங்கள்' தொடரில் அவரது நடிப்பு மக்கள் மத்தியில் பரவலாக வரவேற்பை பெற்றது.

Actress Chandra Lakshman Blessed with Baby Boy

அதே போல, விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற தொடரில், விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்த 'என்னை தேடிக் காதல் என்ற வார்த்தை அனுப்பு' என்னும் பாடலின் வீடியோக்கள், சமூக வலைத்தளம் பிரபலமாக இல்லாத காலத்திலேயே சந்திராவுக்கு பெரிய அளவில் புகழை தேடித் தந்திருந்தது. சந்திரா, இந்த தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சந்திரா, தனது நீண்ட நாள் காதலரான டோஸ் கிறிஸ்டி என்பவரையும் திருமணம் செய்து கொண்டார்.  டோஷ் கிறிஸ்டி மலையாளத்தில் பிரபல நடிகரும் ஆவார்.

Actress Chandra Lakshman Blessed with Baby Boy

தற்போது தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் சந்திரா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி, 'தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது' என அறிவித்துள்ளார். மேலும் தனது கணவர், தனது குழந்தையின் கைகள் கோர்த்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தனது பதிவில், "நன்றி கடவுளே.. எனது பெற்றோர், எனது மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி. உங்களுடைய அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் எனது குழந்தைக்கும் எங்களுக்கும் கிடைக்க வேண்டும்" என்று சந்திரா பதிவிட்டுள்ளார்.

 

Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் இரவின் நிழல்.. எப்போ? பார்த்திபன் கொடுத்த OFFICIAL அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Chandra Lakshman Blessed with Baby Boy

People looking for online information on Chandra Lakshman, Chandra Lakshman Blessed with Baby Boy, Serial Actress will find this news story useful.