Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

Ponniyin Selvan : குந்தவை & நந்தினி லுக்கை ரீகிரியேட் செய்த தமிழ் சீரியல் நடிகைகள்..! வைரல் ஃபோட்டோஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.

Young Tamil Serial Actress Kundavai and Nandini Look PS1

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” திரையில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Young Tamil Serial Actress Kundavai and Nandini Look PS1

இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

Young Tamil Serial Actress Kundavai and Nandini Look PS1

ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் சிறப்புகளுள் ஒன்றாக த்ரிஷா கூறும்போது, “நந்தினி - குந்தவையின் Face Off காட்சிகள்” முக்கியமானவையாக குறிப்பிட்டிருந்தார்.  அந்த அளவுக்கு மாஸான மற்றும் அதே சமயம் அழுத்தமான காட்சிகள் நந்தினி மற்றும் குந்தவை வரக்கூடிய காட்சிகள் எனலாம். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகைகளான அக்‌ஷயா மற்றும் ஸ்வேதா இருவரும் நந்தினி மற்றும் குந்தவை இருவரையும் போல லுக்கில் உடையணிந்து ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.

Young Tamil Serial Actress Kundavai and Nandini Look PS1

இவர்களுள் நடிகை அக்‌ஷயா, ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து புதுப்புது அர்த்தங்கள் தொடரிலும் தோன்றிய இவர், இதற்கு முன்பு பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர், அத்துடன் வெள்ளித்திரையில், சசிகுமார் நடிப்பில் வெளிவந்த தாரதப்பட்டை படத்திலும் நடித்திருந்தார். இதேபோல் சின்னத்திரை சீரியலின் மூலம் பிரபலமான டான்ஸரும் நடிகையுமானவர் ஸ்வேதா. இவர்கள் இருவரும் இணைந்து நடத்தியுள்ள இந்த ஃபோட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

Young Tamil Serial Actress Kundavai and Nandini Look PS1

செப்டம்பர் 30-ஆம் தேதி முதல், லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைபப்டம் பெருவாரியான ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Young Tamil Serial Actress Kundavai and Nandini Look PS1

People looking for online information on Aishwarya rai, AR Rahman, Jayam Ravi, Karthi, Lyca Productions, Mani Ratnam, Ponniyin Selvan, Ponniyin Selvan part 1, Sobhita Dhulipala will find this news story useful.