சமூக வலைதளத்தில் fan கேட்ட கேள்வி.. நடிகை ஆல்யா மானசா கொடுத்த நச் டிப்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீரியல் நடிகையான ஆல்யா மானசா சமீபத்தில் தனது இரன்டாவது குழந்தையை பிரசவித்தார்.

Serial actress alya manasa conversation with fans viral

Also Read | “நிறைய projects பண்றோம்… சீக்கிரமே சொல்றோம்”… தோனி பட நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ராஜா ராணி ஜோடி…

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர்கள் நடிகை ஆல்யா மானசா மற்றும் நடிகர் சஞ்சீவ். இந்த சீரியலின் போது காதல் வயப்பட்ட இருவரும் பின்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த சின்னத்திரை ரியல் ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். திருமணத்துக்குப் பிறகு ஆல்யா மானசா பிறகு ராஜா ராணி 2 என்ற சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

Serial actress alya manasa conversation with fans viral

குழந்தைகள்…

சஞ்சீவ்- ஆல்யா மானசா தம்பதிகளுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. தனது மகளுக்கு அய்லா என்று பெயர் வைத்துள்ளனர். ஆல்யா மானசா குழந்தையின் அழகான புகைப்படம் மற்றும் போட்டோக்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். நடிகர் சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றின் மொழி' சீரியலிலும், நடிகை ஆல்யா மானசா 'ராஜா ராணி 2' சீரியலிலும் பிசியாக நடித்து வந்தனர். இதற்கிடையே ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இதை அறிவித்த போது ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்தனர். தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த அவர் சமீபத்தில் பிரசவத்துக்காக அந்த தொடரில் இருந்து விலகினார்.

Serial actress alya manasa conversation with fans viral

இதையடுத்து சமீபத்தில் ஆல்யா மானசாவுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதை சமூகவலைதளத்தின் மூலம்  அறிவித்துள்ளனர். பிறந்துள்ள குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் இந்த தமபதியினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வந்தனர்.

பிரசவத்துக்குப் பிறகு…

பிரசவத்துக்குப் பிறகும் சமூகவலைதளங்கள் மூலமாக ஆல்யா ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அதையடுத்து சமீபத்தில் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் உரையாடல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர். அதில் குறிப்பாக ஒரு பெண் ”தாய்ப்பால் அதிகரிக்க என்ன செய்யவேண்டும்?” எனக் கேட்டிருந்தார். அவருக்கு பதிலளித்த ஆல்யா “நல்ல உணவை சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர்க் குடியுங்கள். மேலும் என்னுடைய மருத்துவர் என்னை galact  பவுடர்  மற்றும் Lactare ஆகியவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் தாய்ப்பாலை அதிகமாக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்” எனக் கூறியுள்ளார். மேலும் கூடிய விரைவில் நடிப்புக்கு திரும்ப உள்ளதாகவும் அவர் இந்த உரையாடலில் தெரிவித்துள்ளார்.

Serial actress alya manasa conversation with fans viral

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

சமூக வலைதளத்தில் FAN கேட்ட கேள்வி.. நடிகை ஆல்யா மானசா கொடுத்த நச் டிப்ஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Serial actress alya manasa conversation with fans viral

People looking for online information on Aila Syed, Alya Manasa, Alya manasa conversation, Alya Manasa Latest news, Raja Rani Serial, Sanjeev will find this news story useful.