LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

90S Kids குழந்தையா பார்த்த 'சந்திரமுகி' பொம்மியின் குழந்தை..!! வைரலாகும் க்யூட் ஃபோட்டோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதில் தங்களுக்கான இடத்தை இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர்.

90S Kids Serial actress Chandramukhi Bommi Praharshetha baby pic

Also Read | ‘வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...’ - பாடிய அனிருத் .. பார்த்து ரசித்த ரஹ்மான்.! வீடியோ

குறிப்பாக 90களில் வெளியான சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அந்த வகையில் 90களில் வெளியான பிரபல சீரியலான வேலன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் பிரகர்ஷிதா. இந்த சீரியல்கள் மூலம் தமிழ் இல்லங்களில் நேரடியாக சென்றடைந்த பிரகர்ஷிதா, தமிழ் ரசிகர்களின், குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார்.

90S Kids Serial actress Chandramukhi Bommi Praharshetha baby pic

தொடர்ந்து தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2005-ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் பொம்மி என்கிற தாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தை வைத்து ஒரு பாடலே இந்த திரைப்படத்தில் இடம்பெற்றது. பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இந்த திரைப்படத்தில் குறைந்த நேரமே தோன்றினாலும் கூட, பொம்மி பொம்மி என பொம்மிக்கு சொல்வதுபோல், சங்கீதம் குறித்து ரஜினிகாந்த், நயன்தாராவுக்கு பாடும் அந்த பாடல் பிரகர்ஷிதாவை இன்னும் கவனிக்க வைத்து விட்டது.

90S Kids Serial actress Chandramukhi Bommi Praharshetha baby pic

இப்படி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த பிரகர்ஷிதா, தம்முடைய படிப்பையும் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தார். பல மாதங்களுக்கு முன்னர்தான் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பிரகர்ஷிதாவுக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தன்னுடைய குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பிரகர்ஷிதா, தம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

90S Kids Serial actress Chandramukhi Bommi Praharshetha baby pic

படிப்பை முடித்துவிட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வரும் பிரகர்ஷிதா, விரைவில் வெள்ளி திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Video: சிவமணி & ராஜேஷ் வைத்யா.. களைகட்டிய கச்சேரி.. ஒன்றாக ரசித்த AR அமீன் & அபிஷேக் பச்சன்.!

தொடர்புடைய இணைப்புகள்

90S Kids Serial actress Chandramukhi Bommi Praharshetha baby pic

People looking for online information on 90S Kids Serials, Chandramukhi, Praharshetha, Velan will find this news story useful.