www.garudabazaar.com

"நான் என்ன பண்ணேனு இங்க உக்கார வெச்சாங்க..".. அசல் கலகல.. இந்த வாரம் வெளியேறுவது யார்??..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கமல்ஹாசன் வந்திருந்த எபிசோடு பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

Biggboss 6 tamil who is the next evicted contestant

இதற்கு மிக முக்கிய காரணம், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி இருந்த பிரச்சனைகள் தான்.

பொம்மை டாஸ்க் என்ற பெயரில், ஷெரினா கீழே விழுந்தது முதல் பிக்பாஸ் வீட்டிற்குள் தலைவலி ஆரம்பித்தது. ஷெரினாவை தனலட்சுமி தான் தள்ளி விட்டார் என ஒரு கூட்டம் கிளம்பியது. மறுபக்கம், அவர் தள்ளி விடவில்லை என ஆதரவாகவும் சிலர் பேசி இருந்தனர்.

இது பெரிய விவகாரமாக, மாறி மாறி விவாதங்கள் நடந்து கொண்டே இருந்தது. வார இறுதியில் வந்த கமல், தனலட்சுமி ஷெரினாவை தள்ளி விடவில்லை என்பதை குறும்படம் போட்டு காண்பித்திருந்தார். அது மட்டுமில்லாமல், பலரிடமும் அதிகம் சண்டை போட்டு வந்த அசீமையும் கடுமையாக விமர்சித்திருந்தார் கமல்ஹாசன்.

Biggboss 6 tamil who is the next evicted contestant

இது தவிர, இன்னும் பல விஷயங்களையும் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே பேசி இருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர்கள் பற்றிய வீடியோ, இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

"யார் காப்பாற்றப்படுவார்கள்?" என கமல்ஹாசன் கேட்க, முதலில் பேசும் மகேஸ்வரி, "என்னை பொறுத்தவரைக்கும் எனக்கு ஒரு Confident இருக்கு சார்" என்கிறார். தொடர்ந்து, "நான் தான் தப்பு பண்ணி இருக்கேன். அப்டிங்குற பட்சத்துல அது எதுனாலும் மக்கள் தீர்ப்பை நான் ஏத்துக்குறேன்" என அசீம் கூறுகிறார்.

Biggboss 6 tamil who is the next evicted contestant

இதன் பின்னர் பேசும் அசல் கோலார், "நான் என்ன பண்ணிட்டேன்னு என்ன இந்த இடத்துல உட்கார வெச்சு இருக்காங்கன்னு முழிச்சிட்டு இருக்குறேன் சார்" என கூறுகிறார். "சரி நிவாஸினி நீங்க சொல்லுங்க" என கமல் சொன்னதும், "அசல் இருப்பாரு. இருக்கணும்" என்று மட்டும் அவர் பதில் சொல்கிறார். இதனால், இந்த வார இறுதியில் வெளியேற போவது யார் என்பதை அறியும் விறுவிறுப்பு போட்டியாளர்கள் மத்தியில் அதிகம் உருவாகி உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss 6 tamil who is the next evicted contestant

People looking for online information on Asal kolaar, Azeem, Kamal Haasan, Maheswari, Nivaa will find this news story useful.