"யாரடி நீ மோகினி" சீரியல் ஹீரோயின் நக்ஷத்ராவுக்கு நடந்த திருமணம்.. திடீரென பரவும் Wedding Photos.!
முகப்பு > சினிமா செய்திகள்ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அந்த சீரியலின் நாயகி நக்ஷத்ரா.

அதன் பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக தொடங்கிய வள்ளித் திருமணம் சீரியலில் நடிக்கத் தொடங்கினார். இதனிடையே இவருக்கு திருமண ஏற்பாடு நடந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் இவருடைய திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அவரே வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள நக்ஷத்ரா, விஷ்வா என்பவரை திருமணமாகிய தகவலை அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிப்பதாக குறிப்பிட்டு, பதிவிட்டதுடன், விஷ்வாவுடன் மங்களகரமான பாரம்பரிய ஆடையில் மாலையும் கழுத்துமாக எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் விஷ்வாவும் தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தமது மனைவியுடன் என பதிவிட்டு, நக்ஷத்ராவுடனான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த தம்பதியருக்கு திரையுலகையும் மற்றும் சின்னத்திரையுலகையும் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை நக்ஷத்ரா ஜீ தமிழ் சீரியலை போலவே மகுடி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.