நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு பிரபல இயக்குநர் வாழ்த்து - ''நீங்க ரெண்டு பேரும்...''
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 08, 2020 12:32 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதனையடுத்து நயன்தாரா, ரௌடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் தயாரிப்பில் 'நெற்றிக்கண்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார். மேலும் ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து 'மூக்குத்தி அம்மன்' என்ற படத்திலும் நயன்தாரா நடிக்கிறார்.
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்ந்திருந்தார். அதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். அதன் ஒரு பகுதியாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், 'நீங்க ரெண்டு பேரும்' என்று ஹார்ட் ஸ்மைலியை குறிப்பிட்டுள்ளார்.