www.garudabazaar.com

"Title Winner இவங்கள்ல ஒருத்தரு தான் போல".. யூகித்த மைனா.. உடனே மணிகண்டா சொன்ன பதில் !!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.

Myna Nandhini Prediction about bigg boss title winner freeze task

இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.

Myna Nandhini Prediction about bigg boss title winner freeze task

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்த வண்ணம் இருப்பதால், பிக் பாஸ் வீடே தற்போது எமோஷனல் மோடிற்கு மாறி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அசிம், விக்ரமன் மற்றும் கதிரவன் உள்ளிட்டோரின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் வருகை தர உள்ளனர். இந்த நிலையில், பிக் பாஸ் ஆறாவது சீசன் டைட்டில் வின்னர் குறித்து மைனா நந்தினி பேசும் விஷயங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

Myna Nandhini Prediction about bigg boss title winner freeze task

இதுவரை வந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கருத்தை அடிப்படையாக வைத்து மணிகண்டாவிடம் பேசும் மைனா நந்தினி, "இவங்க எல்லாரும் சொல்ற Guessing படி பார்த்தா டைட்டில் வின்னர் ஷிவின் இல்லன்னா விக்ரமனா இருக்கணும்னு தோணுது. எல்லாருக்குமே அவங்கள புடிச்சிருக்கு" என்கிறார்.

Myna Nandhini Prediction about bigg boss title winner freeze task

இதற்கு அடுத்து பேசும் மணிகண்டா, "வெளிய போய் வேலையை பாக்கணும்" என்றும் குறிப்பிடுகிறார். இதன் பின்னர் மைனா நந்தினி மற்றும் மணிகண்டா ஆகியோர், இறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ள போட்டியாளர்கள் பெயரையும் குறிப்பிடுகின்றனர். அதன்படி, விக்ரமன், ஷிவின், அமுதவாணன், ரச்சிதா மற்றும் கதிரவன் ஆகியோர் இறுதி சுற்று வரை முன்னேறுவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Myna Nandhini Prediction about bigg boss title winner freeze task

People looking for online information on Bigg boss 6 tamil, Manikanta, Myna Nandhini will find this news story useful.