தாடி, கண்ணீர்... நடிகர் சேதுராமனின் இறுதிச்சடங்கில் 'சந்தானம்' செய்த மனதை நொறுக்கும் காரியம்...!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானர். இவர் 2013-ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக சந்தானம் உடன் நடித்திருந்தார். வாலிப ராஜா, 50/50 போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவரை நடிகராய் தெரிந்த பலருக்கும் இவர் ஒரு புகழ்பெற்ற தோல் மருத்துவர். இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் அவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாய் விழுந்தது. இந்நிலையில் இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மருத்துவரும் அவரது நண்பருமான அஷ்வின் விஜய் "அவர் இல்லாமல் என் வாழ்க்கை நார்மலாக இருக்க போவதில்லை . அவர் மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்தார்.கொரோனாவால் இறக்கவில்லை. தயவு செய்து இந்த நேரத்தில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து அவரின் அவரின் இறுதிச்சடங்கில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் நடிகர் சந்தானம். மேலும் முகம் முழுக்க சோகமும் கண்ணீருமாக அவர் காணப்பட்டார். மேலும் நடிகர் சேதுராமனின் உடலை சுமந்து சென்றார். இந்தக் காட்சி பார்ப்பவர்கள் மனதை கரைக்கும் வண்ணம் இருந்தது.
தாடி, கண்ணீர்... நடிகர் சேதுராமனின் இறுதிச்சடங்கில் 'சந்தானம்' செய்த மனதை நொறுக்கும் காரியம்...! வீடியோ