கவின் வெளியிட்ட ஃபோட்டோ - ''நீ என்ன பார்க்குறப்போ நான் உன்ன பார்க்கல, நான் உன்ன பார்க்குறப்போ''
முகப்பு > சினிமா செய்திகள்கவின் நடிக்கும் 'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை வினித் வரபிரசாத் இயக்க, ஏகா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக ஹெப்ஸி தயாரித்துள்ளார். இந்த படம் பற்றிய அறிவிப்பு வந்தததும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள் கவினுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து பிரபலங்களின் பதிவுகள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நடிகர் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது நாயுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்து, ''நீ என்ன பார்த்தப்போ நான் உன்ன பாக்கல, நான் உன்ன பாக்குறப்போ நீ எங்கேயோ பார்ப்ப'' என பதிவிட, ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.