நடிகர் இர்பான் கானின் இறுதி ஊர்வலம் : 20 பேர் மட்டுமே பங்கேற்பு... மனதை உலுக்கும் காட்சிகள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் பெருங்குடல் கேன்சர் காரணமாக மரணமடைந்துள்ளார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தனது 54 வயதில் இயற்கை எய்தினார். இந்த செய்தி இந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  கொரோனா காரணமாக ரசிகர்கள் யாரும் அவரது முகத்தை கூட பார்க்க முடியாதா சூழ்நிலையில். பொதுமக்களும், ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு மனதிலேயே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, சச்சின் டெண்டுல்கர், புகழ்பெற்ற சினிமா மற்றும் பிற துறை சார்ந்த பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் இர்பான் கானின் இறுதி ஊர்வலம் மற்றும் உடல் நல்லடக்கம் Actor Irrfan Khan last rituals with limited people around

இந்நிலையில் இர்ஃபானின் உடல் மும்பை வெர்சோவா பகுதியில் இருக்கும் கபர்ஸ்தானில் இன்று மதியம் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. இர்ஃபானின் மகன்கள் அயான் மற்றும் பாபில் இறுதிச் சடங்குகளை செய்தனர். இர்ஃபானின் இறுதிச் சடங்கில் மொத்தமே 20 பேர் தான் கலந்து கொண்டனர். இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் கடலில் மூழ்கினர். முறியடிக்க முடியாத பல சாதனைகளை செய்த ஒரு கலைஞன் இன்று அமைதியாக விண்ணகம் சென்று சேர்ந்தான். கனத்த மனதுடன் RIP மதிப்பிற்குரிய இர்பான் கான்.

Entertainment sub editor