சேது மரணம்... பிரபல நடிகை அதிர்ச்சி - ''இப்போ தான் கொரோனா பத்தி பேசுனாரு... அதுக்குள்ள...''
முகப்பு > சினிமா செய்திகள்'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'வாலிப ராஜா' , 'சக்கப்போடு போடு ராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சேதுராமன். இவருக்கு வயது 36. இவர் சென்னையில் பிரபல தோல் மருத்துவர்களில் ஒருவர்

இவர் நேற்று ( 27 - 03-2020 ) இரவு ஹார்ட் அட்டாக்கால் மரணமடைந்தார். இந்த செய்தி பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் ஒரு சேர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளப்பக்கங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ''இளம் மருத்துவர் டாக்டர் சேது கொரோனா விழிப்புணர்வு வீடியோவை மார்ச் 23 ஆம் தேதி வெளியிட்டிருந்தார். தற்போது அவர் 26 ஆம் தேதி மரணமடைந்துள்ளார். நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவருக்கு எனது இரங்கல்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
Young Actor Doctor Sethu made this Corona awareness video on 23rd March. On 26th he died. Heart attack.
💔
I am too shocked to even to think up words of consolation. 😰
Condolences. https://t.co/cbMROdi9dw
— Kasturi Shankar (@KasthuriShankar) March 27, 2020