www.garudabazaar.com

டோலிவுட் To பான் இந்தியன் ஸ்டார்..‌ நடிகர் பிரபாஸின் 20 ஆண்டு கால திரை பயணம் ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரபாஸ். கடந்த 2002-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஈஸ்வர்' என்ற திரைப்படம் மூலம் நாயகனாக பிரபலமான பிரபாஸ், அதைத் தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த 'வர்ஷம்' என்னும் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் ரீச் ஆனார்.

Actor Prabhas 20 years of journey in film industry

Also Read | படப்பிடிப்பில் சமையல் செய்து அசத்திய சூர்யா & மம்மூட்டி.. ரசிகர்களை கவரும் சூப்பர் போட்டோஸ்!

இப்படி தெலுங்கு மொழியில் முன்னணி நடிகராக பிரபலமான நடிகர் பிரபாஸ், அடுத்தடுத்து ஆக்ஷன் திரைப்படங்கள், ரொமான்டிக் திரைப்படங்கள், குடும்ப செண்டிமெண்ட் என அனைத்து ஜானர்களிலும் பட்டையை கிளப்பினார். அதே போல, பிரபாஸ் படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை அதிக வரவேற்பை பெறக் கூடிய வகையில் அமைந்திருக்கும்.

Actor Prabhas 20 years of journey in film industry

மெல்ல தெலுங்கு சினிமாவில் தமக்கென ஒரு தனி இடத்தை அடைந்த பிரபாஸின் திரை பயணம், பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்திய அளவிலும் டாப் கியர் எடுத்தது. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி  இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருந்த பாகுபலி பாகம் 1 & 2 திரைப்படங்கள் மூலமாக தெலுங்கு, தமிழ் மற்றும் தென்னிந்திய திரை உலகை தாண்டி, இந்திய அளவிலும், உலக அளவிலான இந்தியர்களின் மத்தியிலும் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் பிரபாஸ் புகழ்பெற்றார்.

Actor Prabhas 20 years of journey in film industry

தற்போது பான் இந்தியன் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகர் பிரபாஸ்,  அண்மையில் சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இதற்கு அடுத்தபடியாக, பான் இந்திய அளவில் பிரம்மாண்டமாக உருவாகும் ஆதிபுருஷ் படத்திலும் நடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக, KGF படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்திலும், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்டோருடன் இணைந்து பெயரிடப்படாத "Project K" என குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படத்திலும் பிரபாஸ் நடிக்கிறார்.

Actor Prabhas 20 years of journey in film industry

பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருப்பதால் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் படத்தை எதிர்நோக்கி வருகின்றனர். அப்படி ஒரு சூழ்நிலையில், சினிமாவில் திறமான நாயகனாக தோன்றி 20 ஆண்டுகளை வெற்றிகரமாக அடைந்துள்ளார் நடிகர் பிரபாஸ். தெலுங்கில் முன்னணி நடிகராக உயர்ந்து இந்திய திரையுலகிலும் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், அவருக்கு இன்னும் பல உயரங்கள் தொட வேண்டுமென பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "Government- ஏ எனக்கு ஒரு Call-ல".. உதயநிதி முன்பு Love Today பிரதீப் ஜாலி பேச்சு!!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Prabhas 20 years of journey in film industry

People looking for online information on Baahubali Prabhas, Prabhas, Prabhas 20 years of journey will find this news story useful.