www.garudabazaar.com

"Government- ஏ எனக்கு ஒரு Call-ல".. உதயநிதி முன்பு Love Today பிரதீப் ஜாலி பேச்சு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலகத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பேசி இருந்த விஷயங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

pradeep ranganathan speech about udhayanidhi in kalagathalaivan event

Also Read | PS1: பொன்னியின் செல்வன் பற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு.. மனதார நன்றி சொன்ன நடிகை ராதா!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவாகும் கலகத்தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மெட்ராஸ் பட புகழ் கலையரசனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலினே இந்தப் படத்தை தயாரிக்கிறார். உதயநிதியின் இந்த படத்திற்கு அரோல் கொரேலி & ஸ்ரீகாந்த் தேவா இணைந்து இசையமைக்கிறார்கள்.

pradeep ranganathan speech about udhayanidhi in kalagathalaivan event

ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீஸர், சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டிரெய்லரும் தற்போது வெளியாகி உள்ளது. மக்கள் மத்தியில் இந்த டிரைலர் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கலகத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றிருந்தது.

இந்த விழாவில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். சமீபத்தில் லவ் டுடே திரைப்படத்தை இயக்கி, நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். ஜெயம் ரவியை வைத்து 'கோமாளி' படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார் இயக்குனர் பிரதீப்.

pradeep ranganathan speech about udhayanidhi in kalagathalaivan event

இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக அவர் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில் சத்யராஜ், ராதிகா, இவனா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் ரிலீஸ் ஆன நாள் முதல் மிக அமோக வரவேற்பையும் 'லவ் டுடே' திரைப்படம் பெற்று வருகிறது. இதனையடுத்து, கலகத்தலைவன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் இயக்குனர் - நடிகர் பிரதீப் ரங்கநாதன் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது பேசிய பிரதீப், "ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களோட ரெஸ்பான்ஸ் அண்ட் லவ். ஃபர்ஸ்ட் உதய் சாருக்கு ரொம்ப தேங்க்ஸ், லவ் டுடே படத்துக்கு சப்போர்ட் பண்ணதுக்கு. இந்த படம் ஒவ்வொரு ஷோவுக்கும் காட்சிகள் கூடிட்டே இருக்கு. அதுக்கப்புறம் இவ்ளோ ரீச் கிடைக்குறதுக்கு ரொம்ப முக்கியமான காரணம் ரெட் ஜெயன்ட் தான்.

pradeep ranganathan speech about udhayanidhi in kalagathalaivan event

நீங்க படம் பார்த்துட்டு எனக்கு கால் பண்ணி விஷ் பண்ணீங்க, அப்ப நான் ரொம்ப ஹேப்பியா உணர்ந்தேன். அந்த ஸ்கிரீன்ஷாட் போட்டு என் பிரெண்ட்ஸ்க்கு எல்லாம் அனுப்பிச்சு விட்டு, "கவர்மெண்ட் ஒரு கால் Away'டா எனக்குன்னு கூறினேன். நீங்க (உதயநிதி) அப்படி கால் பண்ணனும்னு அவசியம் இல்ல, ஆனா பண்ணது ரொம்ப சந்தோஷமா இருந்தது. டிரைலர் (கலகத் தலைவன்) ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. மகிழ் சார் எனக்கு உங்களோட வொர்க் ரொம்ப பிடிக்கும். என்னை இங்கே அழைத்ததற்கு மிக்க நன்றி" என தெரிவித்துள்ளார்.

Also Read | 23 வருசத்துக்கு பின் ராமராஜன் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா..! கடைசியா இணைந்த படம் இதுதான்!

"GOVERNMENT- ஏ எனக்கு ஒரு CALL-ல".. உதயநிதி முன்பு LOVE TODAY பிரதீப் ஜாலி பேச்சு!! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

pradeep ranganathan speech about udhayanidhi in kalagathalaivan event

People looking for online information on Kalagathalaivan event, Love today, Pradeep Ranganathan, Udhayanidhi Stalin will find this news story useful.