COBRA D Logo Top
www.garudabazaar.com

பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் புதிய படத்தில் இணைந்த தேசிய விருது வென்ற Stunt Masters!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் புதிய PAN INDIA படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Prabhas Deepika Padukone Project K Stunt Director Anbariv

Also Read | உலகின் விலையுயர்ந்த சொகுசு காரில் மாஸாக நடிகர் சிம்பு.. 'VTK' படத்தின் புதிய போஸ்டர்!

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு பரந்த ரசிகர் பட்டாளத்தை பெற்றார். பாகுபலி படங்களுக்கு பின்னர் ஆக்சன் படமான 'சாஹோ' & கடந்த மார்ச் மாதம்  காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் வெளிவந்த 'ராதே ஷியாம்' படத்தில்  நடித்திருந்தார். 

தற்போது பிரபாஸ் அடுத்து நான்கு பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இது பிரபாஸ் ரசிகர்களிடம்  பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prabhas Deepika Padukone Project K Stunt Director Anbariv

தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுகமபடமான, தற்காலிகமாக பிரபாஸ் 21 என பெயரிடப்பட்டுள்ள 'ப்ரோஜெக்ட் கே'  படம், 'ஆதி புருஷ்' மற்றும் கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் 'சலார்', சந்திப் ரெட்டி வாங்காவுடன் 'ஸ்பிரிட்'  படம் என வரிசையாக படங்களை வைத்துள்ளார்.

தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் Project K படத்தினை வைஜெயந்தி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கிறார்.

Prabhas Deepika Padukone Project K Stunt Director Anbariv

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கியது. இதில் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் கலந்து கொண்டனர்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை திஷா பதானி கலந்து கொண்டார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 3 கட்டங்களாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. தீபிகா படுகோன், பிராபாஸ், அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

Prabhas Deepika Padukone Project K Stunt Director Anbariv

இந்நிலையில் இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த ஆக்சன் காட்சிகளை வடிவமைக்க பிரபல சண்டை பயிற்சி இயக்குனர்கள் அனபறிவ் மாஸ்டர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை படத்தின் தயாரிப்பாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் வெளியான கே ஜி எப் படங்களில் சண்டை காட்சிகளை வடிவமைத்தது இவர்கள் தான். KGF முதல் பாகத்திற்காக அன்பறிவ் இரட்டையர்கள் தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

Also Read | Chess Olympiad: பிரபல நட்சத்திர விடுதியில் பாராட்டு விழா..ஒரே மேடையில் CM ஸ்டாலின் - கமல் - உதயநிதி!

தொடர்புடைய இணைப்புகள்

Prabhas Deepika Padukone Project K Stunt Director Anbariv

People looking for online information on Anbariv, Deepika Padukone, Prabhas, Project K movie, Stunt Director Anbariv will find this news story useful.