www.garudabazaar.com

விஷூவல் அனுபவத்துக்காக கூடுதல் பணி... தள்ளி போகும் பிரபாஸின் ஆதி புருஷ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பிரபாஸ் நடிக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Prabhas Adi Purush Movie Release Date Postponed from Pongal

Also Read | "இந்த வார பரபரப்பு எலிமினேஷன்".. மலையாளத்திலும் அறிவித்த கமல்ஹாசன்..! bigg boss 6 tamil

பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புராணத் திரைப்படம் 'ஆதி புருஷ்'.

இதில் 'பாகுபலி' படப் புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

Prabhas Adi Purush Movie Release Date Postponed from Pongal

'வாரிசு' கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சன்சிட் பல்ஹாரா மற்றும் அன்கிட் பல்ஹாரா சகோதரர்கள் இசையமைத்திருக்கிறார்கள்.

ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிருஷன் குமார், ஓம் ராவத், பிரசாத்  சுடர், ராஜேஷ் நாயர் ஆகியோர்  தயாரித்திருக்கிறார்கள்.

'ஆதி புருஷ்' இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது.

Prabhas Adi Purush Movie Release Date Postponed from Pongal

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படம் வரும் 2023 ஜனவரி மாதம் 12-ஆம் தேதி அன்று ஐமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜீன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆதிபுருஷ் ஒரு திரைப்படம் அல்ல, பிரபு ஸ்ரீ ராமர் மீதான நமது பக்தி மற்றும் நமது சமஸ்கிருதம் மற்றும் வரலாறு மீதான அர்ப்பணிப்பின் பிரதிநிதித்துவம்.

Prabhas Adi Purush Movie Release Date Postponed from Pongal

பார்வையாளர்களுக்கு முழுமையான காட்சி அனுபவத்தை அளிக்கும் வகையில், படத்தில் பணிபுரியும் குழுக்களுக்கு அதிக நேரம் கொடுக்க வேண்டும்.

ஆதிபுருஷ் வரும் ஜூன் 16, 2023 அன்று வெளியாகிறது.

இந்தியாவே பெருமைப்படும் வகையில் திரைப்படம் எடுக்க உறுதி பூண்டுள்ளோம். உங்கள் ஆதரவும், அன்பும், ஆசீர்வாதமும் தான் எங்களைத் தொடர்ந்து நடத்துகிறது". என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kriti (@kritisanon)

Also Read | KamalHaasan : 68வது பிறந்த நாளை கொண்டாடும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்..! ரசிகர்கள் வாழ்த்து ..

தொடர்புடைய இணைப்புகள்

Prabhas Adi Purush Movie Release Date Postponed from Pongal

People looking for online information on Adi Purush, Adi Purush Movie, Prabhas will find this news story useful.