Cadaver D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

KGF இயக்குனர் பிரசாந்த் நீலுடன் பிரபாஸ் இணையும் 'சலார்'.. ரிலீஸ் தேதியுடன் வெளியான போஸ்டர்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2018 ஆம் ஆண்டு, யாஷ் நடிப்பில், கன்னட மொழியில் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் 'KGF'.

Prashanth neel and prabhas salaar movie release date update

முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி, 1000 கோடிக்கு மேல் உலகளவில் வசூல் செய்து, பல்வேறு சாதனைகளையும் படைத்திருந்தது. இந்த இரண்டு திரைப்படங்களையும் பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகம் கூட அடுத்து உருவாகலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தது. கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் இறுதியில் கூட, மூன்றாம் பாகத்திற்கான ட்விஸ்ட் ஒன்றை இயக்குனர் பிரசாந்த் நீல் வைத்திருந்தார்.

Prashanth neel and prabhas salaar movie release date update

இதனிடையே, கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபாஸ் கதாநாயகானாக நடிக்கும் 'சலார்' படத்தை தற்போது பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற மொழிகளான தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது. புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்து வருகிறார்.

சலார் படத்தின் படப்பிடிப்பு, கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜனவரி மற்றும் மே உள்ளிட்ட மாதங்களில், தெலுங்கானா பகுதிகளில் நடைபெற்றிருந்தது. சலார் படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சலார் படத்தின் அடுத்த அப்டேட் இன்று (ஆகஸ்ட் 15) வெளியாகும் என படக்குழு சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது சலார் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி இன்று படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2023 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, சலார் திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி. எஃப் படத்தின் இரண்டு பாகங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், இயக்குனர் பிரசாந்த் நீலின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த எதிர்பார்ப்பு, மிகப் பெரிய அளவில்.அதிகரித்துள்ளது.

 

அப்படி ஒரு சூழ்நிலையில், பிரபல நடிகர் பிரபாஸுடன் பிரசாந்த் நீல் இணைந்துள்ள சலார் படத்தின் ரிலீஸ் அப்டேட்டும் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Prashanth neel and prabhas salaar movie release date update

People looking for online information on Hombale Films, KGF Chapter 2, Prabhas, Prashanth Neel, Salaar will find this news story useful.