www.garudabazaar.com

படப்பிடிப்பில் சமையல் செய்து அசத்திய சூர்யா & மம்மூட்டி.. ரசிகர்களை கவரும் சூப்பர் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் மம்மூட்டி & சூர்யா இணைந்து படப்பிடிப்பில் படக்குழுவினருக்கு உணவு சமைத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Suriya and Mammooty Cooking food for Crew Memebers

Also Read | THUNIVU: இயக்குனர் H. வினோத்தை சந்தித்த பிரபல சார்பட்டா பட நடிகர்.. வைரல் ஃபோட்டோ!

மலையாள திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்மூட்டி. மலையாளம் மட்டுமில்லாமல், தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் மம்மூட்டி நடித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில்  பீஷ்ம பர்வம், சிபிஐ 5, புழு, ரோஸாக் உள்ளிட்ட திரைப்படங்கள் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி உள்ளன. தற்போது 'கிறிஸ்டோபர்', 'நண்பகல் நேரத்து மயக்கம்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் மம்மூட்டி நடித்து வருகிறார்.

Suriya and Mammooty Cooking food for Crew Memebers

இச்சூழலில் மம்மூட்டி மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து நடிக்க உள்ள திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.

திருமணத்திற்கு பிறகு, பெண்களை மையப்படுத்தி கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் அதிகம் நடித்து வரும் நடிகை ஜோதிகா, தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மம்மூட்டியுடன் இணைந்து மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார்.

Suriya and Mammooty Cooking food for Crew Memebers

மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து ஜோதிகா நடிக்கும் திரைப்படத்தினை 'கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்த ஜியோ பேபி  இயக்கி வருகிறார்.

"காதல் - The Core" என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஜோதிகா பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சில நாட்களுக்கு முன் நடிகர் சூர்யா வருகை தந்தார். மேலும் படக்குழுவினர் உடன் சேர்ந்து உணவு உண்ணும் புகைப்படம், நடிகர் மம்மூட்டி உடன் எடுத்த புகைப்படங்களும் அப்போது வெளியாகி இருந்தன.

Suriya and Mammooty Cooking food for Crew Memebers

இந்நிலையில் நடிகர் சூர்யா & மம்மூட்டி இணைந்து சமையல் செய்வது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

மிகப்பெரிய வட்டையில் கேரள ஸ்டைலில் பிரியாணி சமைத்து அதனை குதுப்பியால் மம்மூட்டி & சூர்யா கிண்டுவது போல புகைப்படங்கள் அமைந்துள்ளன. மேலும் நடிகை ஜோதிகா & சூர்யா உணவருந்த தயாராவது போல  புகைப்படங்கள் அமைந்துள்ளன.

Also Read | நாக சைதன்யா & வெங்கட் பிரபுவின் NC22.. பிரம்மாண்ட ஆக்சன் படப்பிடிப்பு! இந்த ஊர்லயா?

தொடர்புடைய இணைப்புகள்

Suriya and Mammooty Cooking food for Crew Memebers

People looking for online information on Kaathal The Core Movie, Mammootty, Suriya, Suriya and Mammooty Cooking food will find this news story useful.