பார்த்திபன் போட்ட செம மீம்..! - 'அது கிடைக்காதவங்களுக்குதான் அந்த ஃபீல் புரியும்'.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சூப்பர் மீமை பகிர்ந்துள்ளார். 

நடிகர் பார்த்திபன் பகிர்ந்த பிரியாணி மீம் | actor parthiban shares a funny meme about briyani

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் அறியப்படுபவர் பார்த்திபன். இவரின் வித்தியாசமான படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. சமீபத்தில் இவர் இயக்கி, நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இரவின் நிழலில் என்கிற படத்தை இயக்குவதில் இறங்கியுள்ளார். 

இந்நிலையில் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மீமை ஷேர் செய்துள்ளார். இன்று ரமலான் பண்டிகையையொட்டி, ''பிரியம் கண்டேன், பிரியானி காணவில்லை'' என பதிவிட்டுள்ள அவர், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற காட்சியின் மீமையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். என் நண்பன் வருவான், எனக்கு பிரியாணி கொடுப்பான் என பார்த்திபன் பகிர்ந்த இந்த நகைச்சுவையான மீம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் பார்த்திபன் பகிர்ந்த பிரியாணி மீம் | actor parthiban shares a funny meme about briyani

People looking for online information on Briyani, Oththa Seruppu Size 7 Tamil, Radhakrishnan Parthiban, Ramzan will find this news story useful.