வடிவேலுக்கிட்ட பார்த்திபன் சொன்ன அட்ரசை துபாயில் கண்டுபிடித்த பிரியா பவானிஷங்கர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செய்தி தொகுப்பாளராக இருந்து பின்னர் தொலைக்காட்சி தொடர் மூலம் புகழ் அடைந்த நடிகை பிரியா பவானி ஷங்கர். இதைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கிய 'மேயாத மான்' படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.

Priya Bhavani Shankarn find's Vadivel Vadivelu, Radhakrishnan Parthiban dubai comedy address Vetrikodikattu Cheran

தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்த அவர் தற்போது  அருண் விஜய்யுடன் மாஃபியா, அதர்வாவுடன் குருதி ஆட்டம், மற்றும் ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்ட்சமாக உருவாகும் கமலுடன் ’இந்தியன் 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் இன்ஸ்டாவில் பதிவேற்றியுள்ள புதிய புகைப்படத்தில் தான் துபாயில் இருப்பதாக குறிப்பிட்டிருந்த அவர். இதில் புகழ் பெற்ற வடிவேல்-பார்த்திபனின் துபாய் காமடியை ரெஃபரன்ஸ் செய்யும் விதமாக ‘விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குசந்து, Dubai main road, Dubai’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor