பிரபல அரசியல்வாதியின் மகனுக்கு நடிகை வாழ்த்து... 'சே... உன் பெற்றோர் புண்ணியம் பண்ணிருக்காங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திற்குள் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஜெனிலியா. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இவர் நடித்த ஹாசினி என்ற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

பிரபல அரசியல்வாதியின் மகனுக்கு வாழ்த்து கூறிய நடிகை popular actress wishes politician son for this reason

கணவர் மற்றும் குழந்தைகளுடன் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிடும் ஜெனிலியாவின் பதிவுகளுக்கு ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி சமீபத்தில் பிரபல காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ மற்றும் ரித்தேஷின் தம்பி தீரஜ் தேஷ்முக்கின் மகனுக்கு அவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீரஜின் மனைவியும் புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஆவார்.

ஜெனிலியா கூறும்போது " அழகான குழந்தை வன்ஸுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லாருக்கும் பேவரைட்டான குழந்தை நீ. எனது மகன்களுக்கு உயிர் நண்பன். எப்பொழுதும் நீ எனக்கு மிகவும் பிடித்தமான குழந்தையாய் இருப்பாய். இந்த உலகத்தில் உன்னைப் போல யாரும் இல்லை. உனது பெற்றோர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள்" என்று பாசத்துடன் கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல அரசியல்வாதியின் மகனுக்கு வாழ்த்து கூறிய நடிகை popular actress wishes politician son for this reason

People looking for online information on , Genelia D Souza, Riteish Deshmukh will find this news story useful.