எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பக்ரீத்’ படத்தின் பாடல்கள் இன்று வெளியானது.

எம் 10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’.
இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியானது.
தற்போது இப்பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஜூன் மாதம் ரமலான் பண்டிகை அன்று வெளியாக இருக்கிறது.