‘வச்ச குறி தப்பாது.. இது தல ஸ்டைல்!’ - துப்பாக்கிச்சுடும் போட்டியில் அஜித்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநில அளவிலான துப்பாக்கிச்சூடு பொட்டியில் நடிகர் அஜித்குமார் கலந்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Ajithkumar participated in the state rifle shooting championship held in Coimbatore

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி கார், பைக், ஆளில்லா விமானம் இயக்கும் ஏரோ மாடலிங், ஃபோட்டோகிராபி என பலவற்றிலும் ஆர்வம் கொண்ட அஜித்திற்கு துப்பாக்கிச்சுடுவதிலும் அதீத ஆர்வம். அவ்வப்போது அஜித் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. துப்பாக்கிச்சுடும் உரிமம் வைத்துள்ள அஜித் தற்போது மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளார்.

கோயம்பத்தூரில் நடைபெற்று வரும் மாநில அளவிலான 45-வது துப்பாக்கிச் சூடு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினரான நடிகர் அஜித் குமார் கலந்துக் கொண்டுள்ளார். இந்த போட்டி கோயம்புத்தூர் காவலர் பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு வந்த அஜித்தை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்த நிலையில், பாதுகாப்பு கருதி புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் அஜித் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆக.8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இதையடுத்து, மீண்டும் இந்த கூட்டணி ‘தல 60’ திரைப்படத்திற்காக இணைந்துள்ளது. அதிரடி ஆக்ஷன் கதையாக உருவாகவிருக்கும் தல 60 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘வச்ச குறி தப்பாது.. இது தல ஸ்டைல்!’ - துப்பாக்கிச்சுடும் போட்டியில் அஜித்! வீடியோ