நேர்கொண்ட பார்வை - தல அஜித்தின் மாஸ் சண்டை காட்சி வீடியோ இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது.

Ajith Kumar Nerkonda Paarvai Movie Fight Scene Promo Video

இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெறும் சண்டை காட்சியின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய படம் ஆகும்