பேட்ட, விஸ்வாசத்துக்கு பிறகு இன்று மீண்டும் தல - சூப்பர் ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'தர்பார்'. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Rajinikanth's Darbar and Ajith Kumar's Nerkonda Paarvai Update today 6PM

இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, ஸ்ரீமன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  இந்நிலையில் இந்த படத்தில் இருந்து முக்கியமான அப்டேட் இன்று வெளியாகும் என இயக்குநர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தல அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து அகலாதே என்ற பாடலும் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.