விக்ரம் வேதா ஸ்டாரின் நடிப்பை பாராட்டிய தல அஜித்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 27, 2019 06:17 PM
'விஸ்வாசம்' படத்தின் மாபெரும் வரவேற்புக்கு பிறகு தல அஜித் ஹீரோவாக நடித்து வரும் படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை படங்களின் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படம் வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதல் சந்திப்பில் தல அஜித் என்னிடம் விக்ரம் வேதா பார்த்ததாகவும் அதில் நான் நன்றாக நடித்திருப்பதாகவும் தெரிவித்தார் என்று கூறினார்.
விக்ரம் வேதா ஸ்டாரின் நடிப்பை பாராட்டிய தல அஜித் வீடியோ
Tags : Thala, Ajith Kumar, Nerkonda Paarvai, Shraddha Srinath