தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையில் சென்சாரில் நீக்கப்பட்டவை குறித்த விவரங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'விஸ்வாசம்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தல அஜித் ஹீரோவாக நடித்து வரும் படம் 'நேர்கொண்ட பார்வை'. அமிதாப் பச்சனின் 'பிங்க்' ரீமேக்கான இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

Thala Ajith and Yuvan's Nerkonda Paarvai censor detail

இந்த படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் வினோத் இயக்குகிறார். நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நீக்கப்பட்ட மற்றும் மியூட் செய்யப்பட்ட வசனங்கள் காட்சிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  அதில், பெண்களை குறிக்கும் சில கெட்டவார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.