நேர்கொண்ட பார்வை படத்திற்காக யுவன் பாடிய அகலாதே பாடல் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 25, 2019 06:15 PM
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் 'அகலாதே ' பாடல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் விஸ்வாசம் எனும் மெஹாஹிட் படத்தைக் கொடுத்த அஜித் அடுத்த ஏழு மாதத்தில் நேர்கொண்ட பார்வைப் படத்தை ரிலிஸ் செய்ய இருக்கிறார். அஜித்தின் 59 ஆவது படமான 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8 வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் அஜித்தோடு வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இந்தப்படத்தின் 'அகலாதே ' பாடல் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்திற்காக யுவன் பாடிய அகலாதே பாடல் இதோ! வீடியோ
Tags : Nerkonda Paarvai, Ajith Kumar