www.garudabazaar.com

அடுத்து இந்த ஊரு தான்.. நடிகர் அஜித்தின் பைக் ரைடு! போட்டோவுடன் வெளிவந்த சூப்பர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான  அஜித் குமார் இந்தியாவில் உள்ள பிரபல நகரில் பைக் ரைடு செய்து வருகிறார்.

Actor Ajithkumar BMW Bike Ride Photos from Pune

Also Read | மாலத்தீவு 5 STAR ஹோட்டலில் ரகுல் ப்ரீத் சிங்.. ஒரு நாள் தங்க வாடகை மட்டும் இம்புட்டா?

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார். சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு கிடையாது. சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இன்று வரை இருந்து வருகிறார். ரசிகர்களின் ரசிகர் மன்ற கணக்குகளே சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன.

சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Actor Ajithkumar BMW Bike Ride Photos from Pune

குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வலிமை படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

Actor Ajithkumar BMW Bike Ride Photos from Pune

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Actor Ajithkumar BMW Bike Ride Photos from Pune

இந்நிலையில் நடிகர் அஜித் துணிவு படத்தின் படப்பிடிப்பு இடைவெளிகளில் அவ்வப்போது பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. பின்னர் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் & வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் நடிகர் அஜித், தற்போது புனே நகரில் தனது நண்பர் சுப்ரஜ் வெங்கட்டுடன் இணைந்து பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை சுப்ரஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | "சல்யூட் மோடி ஜி.. Hats off".. பிரதமர் மோடியை டிவிட்டரில் வாழ்த்திய நடிகர் விஷால்! காரணம் இது தான்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajithkumar BMW Bike Ride Photos from Pune

People looking for online information on Ajith Kumar, Ajithkumar BMW Bike Ride, Pune will find this news story useful.