www.garudabazaar.com

"சல்யூட் மோடி ஜி.. Hats off".. பிரதமர் மோடியை டிவிட்டரில் வாழ்த்திய நடிகர் விஷால்! காரணம் இது தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷால், பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார்.

Actor Vishal appreciatey Narendra Modi for Kasi Temple Renovation

Also Read | முதல் முறை முதலைக்கறி சாப்பிட்ட 'நீயா நானா' கோபி.. கொடுத்த ரியாக்ஷன் தான் Ultimate 😅

தமிழில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் அதன்பிறகு நடித்த சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவர் தற்போது புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கும் 'லத்தி' படத்தில் நடித்து வருகிறார்.

Actor Vishal appreciatey Narendra Modi for Kasi Temple Renovation

லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

லத்தி திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தில் S.J. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.

Actor Vishal appreciatey Narendra Modi for Kasi Temple Renovation

இந்நிலையில் நடிகர் விஷால் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "அன்புள்ள மோடிஜி, நான் காசிக்குச் சென்றேன், அற்புதமான தரிசனம்! பூஜை செய்து கங்கா நதியின் புனிதநீரைத் தொட்டேன். கோயிலை புதுப்பித்து, இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் காசியை தரிசனம் செய்ய நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, Hats Off, Salute மோடி ஜி!" என விஷால் பதிவிட்டுள்ளார்.

 

Also Read | மாலத்தீவு 5 STAR ஹோட்டலில் ரகுல் ப்ரீத் சிங்.. ஒரு நாள் தங்க வாடகை மட்டும் இம்புட்டா?

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vishal appreciatey Narendra Modi for Kasi Temple Renovation

People looking for online information on Kasi Temple Renovation, Narendra Modi, Vishal will find this news story useful.