www.garudabazaar.com

ஆரம்பம் பட ஸ்டைலில் அஜித்.. விமான நிலையத்தில் கூடிய நூற்றுக்கணக்கான ரசிகர்கள்! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

Ajith Kumar at Chennai International Airport with Fans

Also Read | விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் எப்போ ரிலீஸ்?.. வெளியான செம்ம தகவல்..!

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

Ajith Kumar at Chennai International Airport with Fans

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் துணிவு படத்தின் பணிகள்  நடைபெற்று வருகின்றன.  துணிவு படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார்.

Ajith Kumar at Chennai International Airport with Fans

ஐத்ராபாத்  சென்னை & விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் படப்பிடிப்பு நடந்து சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் நடிகர் அஜித், பேங்காக் நகரில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் நடிகர் அஜித் குமார், பேங்காக் பயணத்தை முடித்து கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார். ஆரம்பம் படத்தில் வரும் விமான நிலைய காட்சிகளை இந்த வீடியோ நினைவு படுத்துவது போல அமைந்துள்ளது. அஜித்தின் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது ரசிகர்கள் எடுத்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Ajith Kumar at Chennai International Airport with Fans

துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Ajith Kumar at Chennai International Airport with Fans

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Also Read | பிரபல நடிகர்களுடன் ராகவா லாரன்ஸ் & வடிவேலு.. சந்திரமுகி-2 படத்தின் செம்ம வைரல் BTS!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar at Chennai International Airport with Fans

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar with His Fans, Chennai International Airport will find this news story useful.