'இது கொரில்லா அட்டாக்...' - தி கான்ஜுரிங் டீமின் கலகலப்பான கடத்தல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜீவா நடித்துள்ள ‘கொரில்லா’ திரைப்படத்தின் கலகலப்பான ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

A sneak peek video from Jiiva's Gorilla has been released

ஆல் இன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் விஜய் ராகவேந்திரா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் டான் சாண்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகி ஷாலினி பாண்டே நடித்துள்ளார்.

லும், சிம்பான்ஸி குரங்கு ஒன்று இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. இத்துடன் சதீஷ், ராதாரவி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், கலகலப்பான காட்சிகள் அடங்கிய ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஜூன்.21ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

'இது கொரில்லா அட்டாக்...' - தி கான்ஜுரிங் டீமின் கலகலப்பான கடத்தல் வீடியோ வீடியோ