தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வரும் 2019-2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னை எம்.ஜி.ஆா் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்தவிருக்கிறார்.
இந்த நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பாக நாசர் தலைமையிலான தற்போதைய நிர்வாகத்தினர் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தனர். தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், துணைத் தலைவர் பதவிக்கு பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு கோவை சரளா, மனோபாலா, குஷ்பு உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உதவி தேர்தல் அதிகாரி மோகனிடம் விஷால் அணியினர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். பொதுச் செயலாளர்-விஷால், துணைத் தலைவர்-பூச்சி முருகன், கருணாஸ் உட்பட 19 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு - குஷ்பு, கோவை சரளா, நந்தா, பசுபதி, ஹேமசந்திரா, ரமணா, சோனியா, மனோபாலா, வாசுதேவன், காளிமுத்து, ரத்னப்பா, ஜெரலாட், ஜூனியர் பாலையா, லதா சபாபதி, ராஜேஷ், தளபதி தினேஷ், விக்னேஷ், பிரகாஷ், சரவணன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.