90-ஸ் நாயகி 'சங்கவி'க்கு குழந்தை பிறந்தது... அப்படியே அம்மா ஜாடை...போட்டோ வெளியிட்டு மகிழ்ச்சி..!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் 90-ஸ் நாயகி சங்கவி. கர்நாடகாவை சேர்ந்த இவரின் தந்தை மருத்துவ கல்லூரி பேராசிரியர். இவர் 1993-ஆம் ஆண்டு தல அஜித்துடன் 'அமராவதி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு தளபதி விஜய்யுடன் 'ரசிகன்', நாட்டாமை, கட்டுமரக்காரன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார்.
சுமார் பத்து ஆண்டுகள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த அவர், சமீபத்தில் நடிகர் சமுத்திர கனியுடன் 'கொலஞ்சி' என்ற படம் மூலம் ரீ-என்ட்ரீ கொடுத்தார். நடிகை சங்கவி, வெங்கடேஷ் என்பவரை 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது . குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை 'அன்னையர்' தினத்தன்று அவர் வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு சங்கவி போலவே மிகவும் அழகாக இருக்கும் குழந்தையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.