இவ்ளோ பெரிய வயிறா-கர்ப்பமா இருக்கறப்ப எல்லாரும் கேட்ட கேள்வி- டாப் சீக்ரெட் ஷேர் செய்த நடிகை
முகப்பு > சினிமா செய்திகள்ஃபைவ் ஸ்டார் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. அஜித்துடன் நடித்த வரலாறு படம் இவருக்கு தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. தமிழில் சில படங்கள் நடித்தாலும், தொடர்ந்து மலையாள படங்களில் அதிகம் நடித்தார் கனிகா.

2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீபத்தில் மா என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இது சோஷியல் மீடியாவில் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது. தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் அழகிய நினைவுகளைப் பகிர்ந்து வரும் கனிகா, தற்போது தன் கர்ப்பம் குறித்தும் மகன் பற்றியும் சில விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியது, ‘’ஆமாம், என் குழந்தை பிறக்கும்போது எடை அதிகமான குழந்தையாகத்தான் இருந்தான். எனக்கு அதில் பெருமையாக இருந்தது. நான் கர்ப்பமாக இருக்கும் போதும் என் வயிறு மிகப் பெரியதாக இருந்தது. ஆனால் மற்ற அம்மாக்களைப் போல பிரசவத்துக்குப் பிறகு என்னால் என்னை கவனித்துக் கொள்ள முடியவில்லை, காரணம் என் குழந்தை பிறந்த உடனேயே ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டியிருந்தது. வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும், என் குழந்தை உயிர் பிழைத்தான், அவன் வாழ்வதற்குத் தேர்ந்தெடுத்தான்.
இந்த போஸ்ட் அதைப் பற்றியது இல்லை..இது அதன் பிறகு இயல்பு நிலைக்கு என்னால் எப்படி திரும்ப முடிந்தது என்பது பற்றியது..நான் ஒரு எளிய விதியைப் பின்பற்றினேன். உங்கள் வாழ்க்கை, உங்கள் உடல், உங்கள் உரிமை என்பதுதான் அது.
இன்றுவரை நான் எனது தோற்றத்தைப் பற்றியோ அல்லது குழந்தை வளர்ப்பு வழிகளைப் பற்றியோ மற்றவர்களின் கருத்துக்களை என் மீது திணிக்க விட மாட்டேன்.
நான் ஏன் ஃபிட்னெஸுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன் என்று இன்றும் உங்களில் பலர் நினைக்கலாம். சினிமாவில் நடிப்பதற்காக இதைச் செய்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம் . ஆனால் அது உண்மை இல்லை. நான் அதை எனக்காக செய்கிறேன். இது எனது ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக நான் செய்யும் ஒரு முதலீடு .. எனவே தோழமைகளே ஆரோக்கியமாக சாப்பிட முயற்சி செய்யுங்கள், ஃபிட்டாக இருங்கள்! நல்ல ஆரோக்கியமான எதிர்காலம் இன்று உங்கள் கைகளில் உள்ளது.
அதற்கு தினமும் ஒரு மணி நேரம் செலவழித்தால் போதும். உங்களுக்கான அரோக்கியத்தை நீங்களே உங்களுக்கு பரிசளித்துக் கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் நிச்சயமாக தகுதியானவர், என்னால் இதை செய்ய முடியும் போது, உங்களால் ஏன் முடியாது?
இவ்வாறு கனிகா பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.