டிவி நிகழ்ச்சியில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபத்து - பரபரப்பான காட்சிகளுடன் வெளியான புரோமோ
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை நீபா பிரபல தொலைக்காட்சி தொடர் மற்றும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். குறிப்பாக தளபதி விஜய்யின் 'காவலன்' படத்தில் வடிவேலுவுடன் இணைந்து காமெடி வேடத்தில் இவர் நடித்த காட்சிகளை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது.
![பிரபல நடிகை தீபாவிற்கு ஜி தமிழ் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விபத்து | Popular Actress Neepa inured in Super Mom Season 2 game show on Z பிரபல நடிகை தீபாவிற்கு ஜி தமிழ் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விபத்து | Popular Actress Neepa inured in Super Mom Season 2 game show on Z](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-actress-neepa-inured-in-super-mom-season-2-game-show-on-zee-tamil-photos-pictures-stills.png)
இவர் சமீபத்தில் ஜி தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது இந்த நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் டாஸ்க் ஒன்று செய்யும் போது நீபாவிற்கு விபத்து நேர்ந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீபா தண்ணீர் நிறைந்த இடத்தில் இன்னொரு எல்லைக்கு தாவ முயல்கிறார். அப்போது பயத்துடன் காணப்படும் அவரை சக போட்டியாளர்கள் உற்சாகப்படுத்துகின்றனர். இந்நிலையில் அவர் தாவும் போது சற்றுதடுமாறி கிழே விழ அவரது முகத்தில் அடிபடுகிறது. இந்த வீடியோ நல்ல வைரலாகி வருகிறது.
Tags : Neepa, Zee Tamil, Super Mom season 2