பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் தெய்வமகள் வாணி போஜன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் சார்பாக தொடர்ச்சியாக திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கவுள்ளாராம். இதனை அவரது உதவி இயக்குநர் சாருகேஷ் சேகர் இயக்கவிருக்கிறார்.

Jai and Vani Bhojan teams up for Karthik Subbaraj's next webseries | கார்த்திக் சுப்பராஜ் படத்துக்காக இணைந்துள்ள ஜெய் மற்றும் வாணி போஜ

இந்த வெப் சீரிஸில் ஜெய் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸின் ஷூட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் அணைத்தும் முடிவடைந்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த வெப் சீரிஸ் 8 எபிசோட்களை கொண்டுள்ளதாகவும், அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'தெய்வ மகள்' சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை வாணி போஜன் சமீபத்தில் வெளியான 'ஓ மை கடவுளே' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Entertainment sub editor