'பாகுபலி' புகழ் ராணா கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பெண் யார் தெரியுமா ? - ஆச்சரிய தகவல்கள்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ராணா நேற்று (13/05/2020) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிஹீகா பஜாஜ் என்பவருடன் இருக்கும் ஃபோட்டோவை பதிவிட்டு, 'அவர் எஸ் சொல்லிவிட்டார்' என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து யார் அந்த மிஹீகா பஜாஜ் (Miheeka Bajaj) என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. தொழிலதிபரான மிஹீகா Dew Drop Design ஸ்டுடியோ என்ற ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் எம்ஏ ஆர்ட் அண்ட் டிஷைன் படிப்பை லண்டனில் உள்ள செல்ஸீ ஆர்ட் அண்ட் டிஷைன் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.
மிஹீகா பஜாஜ், பாலிவுட் நடிகை சோனம் கபூரின் நெருங்கிய தோழி என்று கூறப்படுகிறது. மீஹீகாவின் பெற்றோர் சுரேஷ் பஜாஜ் மற்றும் பண்டி பஜாஜ் இருவரும் சொந்தமாக க்ரஸாலா(Krsala) ஜூவல்லரியை நடத்தி வருகின்றனர்.