கமல் படத்தால என் படம் நாசமாச்சு - விவேக் சூசகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'விஸ்வாசம்' படத்துக்கு பிறகு நடிகர் விவேக் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் 'வெள்ளைப் பூக்கள்'. இந்த படத்தை விவேக் இளங்கோவன் இயக்க, ராம்கோபால் கிருஷ்ணராஜூ இசையமைத்துள்ளார்.  இந்த படத்துக்கு ஜெரால்டு பீட்டர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Vivekh speeks about Kamalhaasan's papanasam in Vellai Pookal audio launch

இந்த படத்தை இண்டஸ் கிரியேஷன்ஸ் தயாரிக்க, சார்லி, பூஜா  தேவரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து நடிகர் விவேக் பேசும்போது, நானும் சார்லியும் நீண்ட நாட்களாக நடிப்பது போல் பேசுகிறார்கள்.

யாரைக் கேட்டாலும் எங்க அம்மா உங்க ஃபேன், எங்க அப்பா உங்க ஃபேன் என்கிறார்கள். எனக்கென்ன அவ்ளோ வயசாயிடுச்சா? நாங்களும் யூத் தான்.  நான் காமெடியனா நடிச்ச புதுமுக ஹீரோக்களோட படங்கள்லாம் நல்லா போயிருக்கு. ஆனா நான் முதன்மை வேடத்தில் நடிச்ச படங்கள்லாம் சரியா போல.

'இவன் தான் பாலா திரைப்படம் என் வாழ்க்கையிலேயே பெஸ்ட்னு நான் நினச்சேன். ஆனா அந்த நேரத்துல கமல் சாரோட 'பாபநாசம்' வந்து என் படத்தை நாசமாச்சு. எல்லா தியேட்டரையும் கமல் சார் வாங்கிட்டு போய்ட்டாரு. உடனே கமலால் வீழ்ந்த விவேக்னு போட்ராதீங்க எலக்ஷன் நேரம் வேற இந்த கும்புடு கமல் சாருக்கே கும்பிட்டதா நெனச்சுக்கிட்டும் அவரு. என்றார்.

கமல் படத்தால என் படம் நாசமாச்சு - விவேக் சூசகம் வீடியோ