நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதில் தெலுங்குதேசம் கட்சிக்கும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ஜன சேனா கட்சி சார்பாக நடிகர் பவன் கல்யாண், காஜூவாஹா மற்றும் பீமவரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் ஆகியோருடன் சேர்ந்து கூட்டணி அமைத்து சட்டப்பேரவை, மக்களவை இரண்டிலும் போட்டியிடுகிறது. இந்நிலையில், ஆந்திராவில் அடிக்கும் கடும் வெயிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் பவன் கல்யாண் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
மருத்துவர்கள் ஓய்வு எடுக்க சொல்லி ஆலோசனை கூறியும், அதனை மீறி அனக்காப்பள்ளி, பென்டுர்த்தி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட பவன் கல்யாணின் உடல்நிலை மோசமடைந்ததால் தற்போது பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் பவன் கல்யாணை நேரில் பார்த்து நலம் விசாரித்ததாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விரைவில் நடிகர் பவன் கல்யாண் உடல்நலம் குணமடைந்து தேர்தல் பணிகளை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
I wish all r family & friends contesting, all the very best. I know the hard work that goes into an election.
— Upasana Konidela (@upasanakonidela) April 7, 2019
May the people’s TRUE choice win.
We must do our duty as good Indian Citizens & VOTE! @PawanKalyan @KVishReddy MP-Chevalla#nagababu MP-Narsapuram
Jai Hind 🇮🇳 pic.twitter.com/GxyOLVgq0Q
Ram Charan on Facebook #VoteForGlass#JANASENARevolution2019 pic.twitter.com/hMEtGrjbPJ
— JanaSena Party (@JanaSenaParty) April 7, 2019